க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 43% சித்தி PDF Print E-mail
Written by S.I.M.Akram   
Thursday, 02 April 2015 19:43

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் இவ்வருடம் வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றில் தனது சித்தி எய்தல் விகிதத்தை அதிகரித்து கொண்டது.

பரீட்சைக்கு முகம்கொடுத்த 87 மாணவர்களில் 37 மாணவர்கள் க.பொ.த. உயர்தர பிரிவுக்கு தெரிவாகி உள்ளனர். இச்சித்தி எய்தல் விகிதம் 43% விகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த பெறுபேராக  7A, 1B, 1C   பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
சிறுவர் தின நிகழ்வுகள் PDF Print E-mail
Written by admin   
Saturday, 04 October 2014 16:00

 

ஒக்டோபர் 01-ம் திகதி சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றன. குறிப்பாக அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் இத் தினம் நினைவுகூறப்பட்டது. புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகளில் கவனயீர்ப்பு பேரணியும் கலை விழாவும் இடம்பெற்றது.

தில்லையடி முஸ்லிம் ம.வி. பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பழைய மாணவர் சங்கமும் ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் பேரணியில் 4, 5, 6-ம் தரங்களில் பயிலும் மாணவ, மாணவியர் 300 பேர் வரை கலந்துகொண்டனர். WODEPT நிறுவனம் பேரணிக்கு அனுசரணையை வழங்கியது.

Last Updated on Thursday, 15 January 2015 11:13
Read more...
 
தூர நோக்கு PDF Print E-mail
Written by S.I.M.Akram   
Monday, 09 September 2013 00:11

தூர நோக்கு

மாறும் உலகின் மாற்றங்களை அனுசரித்து, சகிப்புத் தன்மை ,நடுநிலைமை,பிறர் நலம் பேணல் போன்ற நற்பண்புகளை மாணவர் மத்தியில் வளர்த்து சமூக பிரஜைகளை உருவாக்கி தேச நலனைக் காத்தல்.

பணிக்கூற்று

அதிபர், ஆசிரியர், மாணவர்,பெற்றார் மற்றும் நலன் விரும்பிகளாகிய நாம் எமது கல்லுரி முகாமைத்துவத்தில் பங்கெடுத்து ஜனநாயக சூழலை உருவாக்கி, மனித விழுமியங்களையும் தத்தமது ஒழுக்க பண்பாட்டு கலாசார விழுமியங்களையும்  கடைப்பிடித்து, பல்லின சமூகத்தினரிடையே சேர்ந்து வாழும் திறமைகளை உருவாக்கி, நவீன வேலை உலகிற்கு ஏற்ற மாணவர் பரம்பரையை உருவாக்க உறுதி பூணுவோம்.

Last Updated on Saturday, 04 October 2014 16:12
 
மைதான புனர் நிர்மாணம் PDF Print E-mail
Written by S.I.M.Akram   
Friday, 26 September 2014 20:32

புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் பணிப்பின் பேரில், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மைதானம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

Last Updated on Friday, 26 September 2014 20:37
Read more...
 
தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் PDF Print E-mail
Written by S.I.M.Akram   
Monday, 09 September 2013 10:32

இனிமையான கடல்காற்று,இதமான தில்லைப் பூக்களின் வாசனையிடையே உப்புத்தளம் ஈன்றெடுத்த தில்லையடி கிராமத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருப்பதே எமது தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயமாகும்.

இவ்வித்தியாலயம்; தில்லையடியைச் சேர்ந்த பிரதி நகர பிதா திரு.எம்.எம். அஹமட் கபீர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க; புத்தளத்தை பிறப்பிடமாக கொண்ட தேசிய அரசுப் பேரவை உறுப்பினரும், நிதித்திட்டமிடல், பொருளாதார, பிரதி அமைச்சருமான ஜனாப் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களால் 1978.02.10ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

Last Updated on Friday, 26 September 2014 21:03
Read more...
 
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2
Design & Developed by S.I.M.AKRAM - 0718002439